சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கஇருப்பதாகவும், படத்தின் முழு கதை குறித்தும் தகவல் வெளியாகியிருக்கிறது.
பி.வாசு இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக ஓடியது சந்திரமுகி. இப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருந்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ஆசை எனக்கு உள்ளது என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார்.
இதனை அடுத்து சந்திரமுகி படத்தை இயக்கிய இயக்குனர் பி.வாசு, இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்றும், அதை பெரிய பட நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சில வாரத்திற்கு முன் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு ஒன்றில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் அடுத்ததாக நடிக்க இருக்கின்றேன் என கூறியுள்ளார்.
அந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பி.வாசு இயக்குகிறார். சந்திரமுகி முதல் பாகத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். மனோதத்துவ மருத்துவரான ரஜினி சந்திரமுகி பற்றி அறிந்து, அந்த சந்திரமுகியாகவே மாறிய ஜோதிகாவை அதில் இருந்து மீட்பது போல் படம் அமைத்திருக்கும். இப்பொழுது நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் சந்திரமுகி 2ம் பாகத்தின் கதை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
அப்படத்தில் வரும் அரண்மனையில் இருந்த வேட்டையன், சந்திரமுகி ஆகியோரின் பின்னணி கதையை முழுமையாக விவரிப்பது போன்று படத்தின் முழு கதையும் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கான முழு கதையையும் சில ஆண்டுகளாகவே நான் தயார் செய்து கொண்டிருந்தேன் என்று இயக்குனர் பி.வாசு கூறியுள்ளார்.
இப்படத்தில் ரஜினி நடிக்கவில்லை என்றாலும், லாரன்ஸ் வைத்து புது, புது கதாபாத்திரங்களுடன் சந்திரமுகி 2ம்பாகம் எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தாக்கம் முடிந்த பின்னரே படப்பிடிப்பு நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.