Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீர்னு ஒரு சத்தம்…. தலைகீழாக நின்ற லாரி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கண்டெய்னர் லாரி திடீரென டயர் வெடித்ததால் தலைகீழாக ரோட்டில் நின்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென லாரியின் டயர் வெடித்து செயல்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி செங்குத்தாக நின்றுள்ளது.

இதில் பீகார் மாநிலத்தில் வசிக்கும் லாரி ஓட்டுநர் ஓம்பிரகாஷ் மற்றும் துணை ஓட்டுநர் இர்பான் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக சாலையில் இருந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்துள்ளனர்.

Categories

Tech |