Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மழைக்கு ஒதுங்கிய தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கண்டமானடியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்பவரது நிலத்தின் வழியாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென பெய்த கனமழையால் நின்றுகொண்டிருந்த லாரியின் கீழ் மழைக்கு ஒதுங்கி இருக்கிறார்.

இதனை பார்க்காத ஓட்டுனர் லாரியை இயக்கியுள்ளார். இதில் லாரி டயரில் சிக்கி கலியபெருமாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |