ஆட்டோவில் காய்கறி வாங்க சென்ற தம்பதியினர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பாவூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தினமும் ஆட்டோவில் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் வழக்கம் போல் பெரியசாமி மனைவி சரஸ்வதியை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் தலைவாசல் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது பால் குளிரூட்டும் நிலையம் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது லாரி ஒன்று ஆட்டோ மீது மோதி உள்ளது. இதில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் காயமடைந்த அவரது மனைவி சரஸ்வதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து பெரியசாமியின் மகன் அஜித்குமார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளா.ர் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான வெங்கடேசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.