லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒட்டனேரி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்துரு அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் மற்றும் அஜித்குமார் ஆகிய 2 நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் செல்போனை பழுது பார்க்க ஆற்காடு சென்றுள்ளார். அப்போது ஆற்காட்டில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரி அருகாமையில் சாலையை கடக்க முயன்ற நிலையில் எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதியது.
இதில் சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அஜித்குமார் மற்றும் ஸ்ரீதரன் படுகாயம் அடைந்துள்ளனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.