சரக்கு லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திராவில் இருந்து தக்காளி ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணமங்கலம் அருகே ஆரணிக்கு செல்லும் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் ராஜப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் கிளினர்ராக சென்ற சுப்பிரமணி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த லாரி ஓட்டுநரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.