Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. போலீஸ்காரர் பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மதுரை மாவட்டத்திலுள்ள அருகம்பட்டியில் தெய்வராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் தெய்வராசு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் காவல் நிலையத்தில் தனது பணி முடிந்து கீரனூரில் இருந்து கள்ளிமந்தையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தெய்வராசு தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தெய்வராசுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தெய்வராசு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த லாரியை விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |