லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இவர் பொம்மிடியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார்சைக்கிள் மீது தர்மபுரி நோக்கி சென்ற ஒரு லாரி பயங்கரமாக மோதியது.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.