மோட்டார் சைக்கிள்- லாரி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் ஆட்டோ டிரைவராக வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மேகலா என்ற மனைவியும், 1 ஆண் குழந்தையும்,1 பெண் குழந்தையும் இருக்கின்றனர். இதனையடுத்து ரமேஷ் திருமக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் இரவு நேரத்தில் தினசரி வீட்டிற்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதன்படி ரமேஷ் திருமக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரி ரமேஷ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். எனவே அவர் ஹெல்மெட் அணிந்து விபத்து நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.