Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாகனத்தை சர்வீஸ் விட சென்ற ஓட்டுநர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி லாரி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்ன மோட்டுர் கிராமத்தில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்பர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் லோகேஷ் தனது இருசக்கர வாகனத்தை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக நாயுடு கண்டிகை பகுதியில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த கம்பரஷர் மீது மின்சாரம் பாய்ந்து இருந்ததை அறியாமல் அதை லோகேஷ் தொட்ட போது மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோக்கேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |