Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போர்வெல் லாரி உரிமையாளர்களின்…. 2- வது நாள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள போர்வெல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் 5 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி 2-வது நாளும் அரங்கேறியது. இந்தப் போராட்டத்தில் பெட்ரோல, டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், டீசலுக்கு ஜி.எஸ்.டி.வரி விதித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள போர்வெல் எந்திர உரிமையாளர்கள் 100 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய போர்வெல் எந்திர லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு லாரியில் 10 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதால் 100 லாரிகளில் பணிபுரிந்து வரும் ஆயிரம் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் போராட்டம் வருகின்ற 6-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற இருப்பதாக போர்வெல் லாரி உரிமையாளர் சங்க மாவட்ட பொருளாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |