Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியை பார்த்து ஓடிவருது…. சாலையில் வீசப்பட்ட கரும்புகள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

குட்டியுடன் லாரியை வழிமறித்த யானை கரும்புகளை தின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி காரப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் குட்டிகளுடன் யானை சுற்றித் திரிந்தது. இதனையடுத்து யானை ஓடி வருவதை கண்டு அச்சமடைந்த டிரைவர் லாரியை அங்கு நிறுத்தினார். அதன்பின் அவ்வழியாக சென்ற மற்றவர்களும் தங்களது வாகனங்களை வரிசையாக சாலையில் நிறுத்தினர்.

அப்போது லாரியில் இருந்த கிளீனர் வண்டியின் பின்பக்கம் ஏறி அதிலிருந்து கரும்புத் துண்டுகளை எடுத்து சாலையில் வீசினார். இதனைதொடர்ந்து யானை மற்றும் குட்டிகள் கரும்புத் துண்டுகளை ருசித்து தின்றது. அதன்பின் யானை குட்டிகளுடன் கரும்புகளை தின்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 நிமிடமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்துக்கு பிறகு வாகனங்கள் அங்கிருந்து ஒவ்வொன்றாக புறப்பட்டது.

Categories

Tech |