லாரியில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் லாரியில் கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விருதுநகர் உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் லாரி டிரைவர் மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த மலை மன்னன் என்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் மலை மன்னன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கணேசன் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.