நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கதவை உடைத்து 96 டயர்களை திருடிய ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரத்தில் டிரான்ஸ்போர்ட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி என்ற ஊரில் இருந்து 67 கார் டயர்களை ஏற்றுக்கொண்டு கோவைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி போளூர் அருகாமையில் இருக்கும் பாக்குமார் பேட்டை இருக்கும் ஒரு ஹோட்டலில் ஓட்டுநர் சாப்பிட்டு விட்டு லாரியில் படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் எழுந்து பார்த்த போது லாரியின் பின்புறம் கதவின் சீல் மற்றும் பூட்டு உடைத்து மர்ம நபர்கள் 96 கார் டயர்களை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் 5 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக குப்புசாமி ட்ரான்ஸ்போர்ட் நிர்வாகிக்கு தெரிவித்துள்ளார். அதன்பின் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து வசூல் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது அதில் 96 கார் டயர்கள் இருந்தது.
அதன்பின் அவர்களை விசாரணை செய்ததில் லாரியை ஓட்டி வந்தது பழனிசாமி என்பதும், குப்புசாமி ஓடி வந்த லாரியில் இருந்த டயர்களை திருடியதும் அவர்தான் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து 96 கார் டயர்களை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் பழனிச்சாமி உடன் திருட்டில் ஈடுபட்ட முத்து மற்றும் டேவிட் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட பழனிசாமி இது போல் கண்டெய்னர் லாரிகளில் பூட்டை உடைத்து பல பொருட்கள் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.