Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொடுத்த கடனை கேட்ட வெங்கடேசன்…. தப்பியோடிய தம்பதியினர்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

லாரிகளை வைத்து தொழில் செய்த நபரை கொலை செய்து விட்டு தப்பிக்க முயன்ற தம்பதியினரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வன்னிய அடிகளார் நகர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சின்ன வேப்பம்பட்டு பகுதியில் வசிக்கும் லாரி மெக்கானிக் சங்கர் என்பவருக்கு 1,00,000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அதன்பின் சங்கர் வீட்டுக்கு சென்று வெங்கடேசன் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் கோபமடைந்த சங்கர் இரும்பு கம்பியால் வெங்கடேசனை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற கணவன் மற்றும் மனைவியைத் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து சங்கர் மற்றும் பாக்கியலட்சுமி பெங்களூருவுக்கு தப்பிச் செல்வதற்காக ஓசூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |