பயங்கர ஆயுதங்களுடன் ஜம்முவின் கத்துவா பகுதியில் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச கவனத்தை திசை திருப்புவதற்காக பயங்கரவாதத்தை கையில் எடுத்திருக்கிறது.கஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் , பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் முகாமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக தற்போது லாரி ஒன்று பிடிபட்டுள்ளது.ஜம்முவின் கத்துவா பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது .
இது தீவிரவாதிகளின் சதி திட்டமா என பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது இந்த நிலையில்தான் தற்போது ஜம்முவின் ஆயுதங்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறார்கள் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தில் இருந்த மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.