பெண்கள் அனைத்தையும் கவனமாக பார்க்கக் கூடியவர்கள். முதல்முறையாக அவர்களைப் பார்க்க செல்லும்போது நீங்கள் நன்றாக போக வேண்டியது மிகவும் அவசியம் .ஒரு ஆணை முதன் முறையாக பார்க்கும் போது பெண்கள் எதையெல்லாம் கவனிக்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.
பெண்கள் ஆண்களின் கண்ணை பார்த்து அனைத்தையும் கண்டுபிடித்துவிட குணம் உடையவர்கள். நீங்கள் எப்படி பார்த்து பேசுகிறீர்கள்? உண்மையாகத் தான் இருக்கிறீர்களா? உங்களுடைய நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்து அவர்களால் கண்டுபிடித்துவிட முடியும்.
நீங்கள் பார்மலான சட்டை அணிந்து செல்கிறீர்களா? அல்லது டீ சர்ட் அணிந்து செல்கிறீர்களா? என்பது முக்கியமல்ல. அவர்களின் மனதை கவரும் வண்ணமாக இருக்க வேண்டும் அது தான் முக்கியம்.
பெண்களுக்கு பிடித்த நிறம் கறுப்பு, பச்சை, மெரூன், பச்சை ஷேடுகளில் ஆடை அணிந்து செல்லுங்கள்.
நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள்? அவர்கள் உனக்களுடன் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்வார்களா என்பதையெல்லாம் பார்ப்பார்கள்.
நீங்கள் மற்றவர்களிடம் எப்படி பேசுகிறீர்கள் என்று பார்ப்பார்கள். பெரும்பாலும் பெண்களுக்கு நகைசுவை உணர்வாக பேசுவது மிகவும் பிடிக்கும். எனவே உங்களிடம் அதையும் கவனிப்பார்கள்.
பெண்கள் உங்களுடைய கைகளை கவனிப்பார்கள் என்று சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். அமாம் நீங்கள் அவர்களுக்கு நாற்காலிகளை தருவது போன்ற கைகளின் அசைவுகளை கவனித்து கொண்டே இருப்பார்கள்.