விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமாகிய லாஸ்லியா நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகின்றது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் ‘பிக்பாஸ்’ ஆகும். அந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் முன்றாவது சீசனில் கலந்துகொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்து பிரபலமாக மாறிய நட்சத்திரம் லாஸ்லியா ஆவார். இதனையடுத்து லாஸ்லியா தற்போது ‘பிரண்ட்ஷிப்’ என்னும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார்.
அதன்பின் லாஸ்லியா ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தை தொடர்ந்து ‘கூகுள் குட்டப்பன்’ என்னும் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லாஸ்லியா நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர்-17 ஆம் தேதி ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.