லசித் மலிங்கா இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்கிறார்
35 வயதான ‘யார்க்கர் மன்னன்’ என்றழைக்கப்படும் லசித் மலிங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆவார். இவர் உலக கோப்பை தொடர் முடிவுடன் தனது ஓய்வு அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மலிங்கா ஓய்வை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் பங்கேற்கும் லசித் மலிங்க அதன் பிறகுதான் ஓய்வை அறிவிக்கிறார். பின்னர் அவர் இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர இருக்கிறார்.ஆஸியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். உலக கோப்பை முடிந்தவுடன் நேரடியாக அவர் அங்குதான் சென்றார். நாளை தான் இலங்கை செல்கிறார். ஓய்வை அறிவித்த பின் ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளராக பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் இதற்காக தனது நண்பர்களிடம் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது