பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் கடற்கரை போட்டோஷுட்டிற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் மூன்றின் மூலம் தமிழக ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார். குறிப்பாக இவர் பேசும் இனிமையான இலங்கை தமிழுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
இதற்கிடையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தையை மறைவின் சோகத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் லாஸ்லியா தற்போது திரை உலகில் கவனம் செலுத்தி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது அவரது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அந்த வகையில் அவர் வெளியிட்ட கடற்கரை போட்டோஷூட்டிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.