Categories
அரசியல்

தமிழ் சினிமாவில் கடந்த 6 வருடங்களாக…. தீபாவளிக்கு மோதிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்…. இதோ ஒரு பார்வை …..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் எப்போது வெளியானாலும் அதற்கென தனி மார்க்கெட் இருக்கும். அதுவும் குறிப்பாக தீபாவளி,பொங்கல் மற்றும் ஆயுத பூஜை போன்ற பண்டிகை தினங்களில் இரண்டு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானால் போதும் அவ்வளவுதான். யாருடைய படம் நன்றாக இருக்கின்றது, எவ்வளவு வசூல், யார் பெரிய நடிகர் என பெரிய விவாதமே நடைபெறும். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தீபாவளி தினத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த ஒரு பதிவை இதில் பார்க்கலாம்.

2016(அக்டோபர் 30)

1. கொடி- தனுஷ், திரிஷா, அனுபமா பரமேஸ்வரன்
2. காஷ்மோரா-கார்த்தி, நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா.

இந்த வருடத்தில் தீபாவளிக்கு அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படம் எதுவும் வெளியாகவில்லை. இதில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

2017 (அக்டோபர் 18)

1. மெர்சல்- விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் எஸ் ஜே சூர்யா.

2. மேயாத மான்- வைபவ், பிரியா பவானி சங்கர் மற்றும் விவேக் பிரசன்னா.

3. சென்னையில் ஒரு நாள் 2- சரத்குமார், நெப்போலியன் மற்றும் அஜய்.

இதில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக 260 கோடி ரூபாய் வசூலித்து முதலிடம் பிடித்தது. அதேசமயம் உலக அளவில் இதுவரை அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படங்களில் ஏழாவது இடத்தில் உள்ளது.

2018 (அக்டோபர் 20)

1. சர்கார் – விஜய், கீர்த்தி சுரேஷ்

ஏ ஆர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான இந்த திரைப்படம் 243 கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

2019(அக்டோபர் 27)

1. பிகில் – விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷரப்

2. கைதி- கார்த்தி மற்றும் நரேன்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் 305 கோடி ரூபாய் வசூல் செய்து முதலிடம் பிடித்தது. கைது திரைப்படமும் ஓரளவு வெற்றியை பெற்றது.

2020 (நவம்பர் 14)

1. சூரரைப் போற்று – சூர்யா, அபர்ணா பால முரளி, ஊர்வசி

2. மூக்குத்தி அம்மன்- நயன்தாரா மற்றும் ஆர் ஜே பாலாஜி.

இந்த சமயம் கொரோனா ஊரடங்கு என்பதால் அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2021 (நவம்பர் 4)

1. அண்ணாத்த – ரஜினி, கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா

2. ஜெய் பீம் – சூர்யா, மணிகண்டன்

இதில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் மற்றும் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இரண்டும் அமேசான் பிரைம் ஓடிடு தளத்தில் வெளியானது. அண்ணாத்த திரைப்படம் 240 கோடி ரூபாய் வசூல் செய்து முதலிடம் பிடித்தது. உலக அளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. அதனைப் போல ஜெய் பீம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |