வாகன ஓட்டிகளுக்கு பிப்ரவரி 15ம் தேதி முதல் பாஸ்டேக் இல்லாவிட்டால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஜனவரி 1, 2021 முதல், அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக்குகள் கட்டாயமாக இருக்கும் என்று தெளிவுபடுத்தியது. இதனை மீறினால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க பட்டது. இதையடுத்து, பாஸ்டேக் காலக்கெடுவை பிப்ரவரி 15ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது. எனவே, பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு நான்கு சக்கர வாகனங்கள் சங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த FASTag கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போன் பே செயலி மூலம் ஏர்டெல் பேமண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பரோடா வங்கி, சிட்டி யூனியன், ஈக்விடாஸ் பைனான்ஸ், பெடரல் வங்கி, எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, IDFC வங்கி, IDBI First Bank ஆகிய வங்கிகளின் சேவைகள் வழங்கப்படுகின்றன
தற்போது கூகுள் பே மற்றும் போன்பே செயலிகள் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
போன்பே மூலம் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள், உங்கள் செயலியில் ஃபாஸ்டேக் என்ற ஐகானைக் கிளிக் செய்யவும். அதிலிருக்கும் வங்கிகளின் பட்டியலிலிருந்து, உங்கள் ஃபாஸ்டேக் வழங்கும் வங்கியைத் தேர்வுசெய்யவேண்டும். பின்னர் தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். தொடர்ந்து உங்கள் FASTag ஐ ரீசார்ஜ் செய்ய கட்டணம் செலுத்துங்கள்.
கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்கள், மொபைலில் கூகுள் பே செயலியைத் திறந்து New என்பதை தேர்வுசெய்க. பின்னர் மெனுவிலிருந்து, More என்பதை கிளிக் செய்து FASTag ரீசார்ஜ் ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு ஃபாஸ்டேக் வழங்கும் வங்கியைத் தேர்வுசெய்ய வேண்டும். தொடர்ந்து கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். பின்னர் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய பணம் செலுத்துங்கள்.