லெஜெண்ட் சரவணா படத்தின் கதாநாயகிக்கு லதா ரஜினிகாந்த் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
சரவணா ஸ்டோர் புகழ் லெஜெண்ட் சரவணா தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ராவ்டேலா நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஊர்வசிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஊர்வசி மேற்கொள்ளும் பணிகளுக்காக அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்வதாகவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஊர்வசி, “ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இணைந்து என் முதல் படத்திற்காக வாழ்த்தினர். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும். மேலும் குழந்தைகளின் அமைதிக்காக ஊர்வசி ராவ்டேலா என்ற எனது அமைப்பின் சார்பாக உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.