லாட்டரி எண்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 200 ரூபாயை பறிமுதல் செய்னர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் 2வது தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரையண்ட் நகர் 12-வது தெருவில் லாட்டரி சீட்டு எண்களை எழுதிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனை கையும் களவுமாக பிடித்தார். அதன்பின் அவரிடம் இருந்த லாட்டரி எண்கள் அடங்கிய சீட்டு மற்றும் 200 ரூபாயை சப்-இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்தார்.