Categories
உலக செய்திகள்

லட்ச கணக்கான மாணவர்களின் மொபைல் எண் திருட்டு…. இணையத்தை பதம் பார்த்த ஹேக்கர்கள்…!!

பிளாக்பாட் தளத்தில் சேமிக்கப்பட்ட 8 பல்கலைக்கழக மாணவர்களின் தகவல்களை சைபர் குற்றவாளிகள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உள்ள காலகட்டத்தில் சைபர் தாக்குதல் என்பது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.இதற்கு தனி நபர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைவரும் இரையாகி கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் ஜனநாயக கட்சியின் அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் முதல் பில்கேட்ஸ் வரை பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது பிளாக்பாட் என்ற தளத்தில் சேகரித்து வைக்கப்பட்ட 8 பல்கலைக்கழகங்களில் படிக்கின்ற மாணவர்கள் அனைவரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சைபர் குற்றவாளிகள் திருடி இருக்கின்றனர். ஆக்ஸ்போர்டு, லவுபரோ, ரீடிங், ஆம்ப்ரோஸ் உட்பட்ட 8-ற்க்கும் மேலான பல்கலைக்கழகங்களில் படிக்கக்கூடிய மாணவர்களின் தரவுகள் அனைத்தையும் திருடியுள்ளனர். இத்தகைய சைபர் தாக்குதலானது மே மாதம் நடைபெற்ற நிலையில், பிளாக்பாட் இந்தத் தகவலை தற்போது அதிகாரப்பூர்வமான முறையில் அறிவித்திருக்கின்றது.

பிளாக்பாட் என்ற தளமானது பல்கலைக்கழகங்களில் படிக்கக்கூடிய மாணவர்கள், நிதி திரட்டும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய ஒரு தளமாகும். இந்த தளம் தற்போது ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதில் லட்சக்கணக்கான மாணவர்களின் அலைபேசி எண்கள் உட்பட தனிப்பட்ட அனைத்து தகவல்களையும் சைபர் குற்றவாளிகள் திருடிருக்கின்றனர். ஆனால் இந்த சைபர் தாக்குதலில் கிரேடிட் கார்டு தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சைபர் குற்றவாளிகள் கேட்ட பெரும் தொகையினை பிளாக்பாட் கொடுத்தது. அதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களிடம் இருந்த அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆயினும், எவ்வளவு மதிப்பிலான தொகை கொடுக்கப்பட்டது என்று பிளாக்பாட் நிறுவனம் வெளியிடவில்லை.

Categories

Tech |