மறைந்த நடிகை, தொகுப்பாளினி சித்ராவின் ரசிகர்கள் கடந்த வருடம் அவருக்கு நடந்த சிறப்பை தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பிரபலமான தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த தொகுப்பாளினி சித்ரா, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் அந்த கதாபாத்திரத்தோடு நன்றாக பொருந்தியிருந்தார். இதனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இவரின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று சொந்த பிரச்சனைகளால் மனமுடைந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
https://www.instagram.com/p/CSBooAQBuld/?utm_source=ig_embed&ig_rid=ca742345-643f-42ee-8b25-4401b22a146e
மேலும் அவரது இழப்பு பலரையும் கலங்கடித்தது. குறிப்பாக, அவரின் ரசிகர்கள் தற்போது வரை அவரை மறக்காமல் இதற்கு முன்னால் நடந்த ஒவ்வொரு விஷயங்களையும், ஒவ்வொரு நாளும் இணையதளங்களில் பகிர்ந்து வருத்தப்படுகிறார்கள். இந்நிலையில் சித்ராவிற்கு அவரின் ரசிகர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அன்று ஒரு கொடி டிசைன் அறிமுகம் செய்தார்கள். அதனை அவரே திறந்துவைத்தார். தற்போது அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகமாக பகிர்ந்து ரசிகர்கள் வேதனையடைந்து வருகிறார்கள்.