Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

3 மணிக்கு வழிப்பறி….. 9 மணிக்கு சிறை…… அண்ணன்-தம்பி கைது….. தனிப்படை போலீஸ் அதிரடி….!!

நாமக்கல்லில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது  செய்துள்ளனர்.

நாமக்கல் குமாரபாளையம் பகுதியை  அடுத்த அண்ணா நகரில் வசித்து வருபவர் சித்திக். இவர்  டயர் ரீடிரேடிங் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை 3 மணி அளவில் சித்திக்  காய்கறி வாங்க குமாரபாளையம் to எடப்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் உன்னிடம் உள்ள பணத்தை தருமாறு கூறி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து தன்னிடம்  பணம் இல்லை என்று சித்திக் கூற, கத்தியை காட்டி மிரட்டி அவரை சோதனை செய்ய ஆரம்பித்தனர். பின் அவர்களிடமிருந்து தப்பிக்க கூச்சலிட்டார் சித்திக். அப்போது அவர் மீது அந்த மர்ம கும்பல் மிளகாய் பொடி தூவி தப்பி ஓடினர்.  இதையடுத்து சித்திக் குமாரபாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தனிப்படை அமைத்து இரவு 9 மணி அளவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறை அப்போது சோதனைச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பலை   பிடித்து வந்து விசாரித்தனர். அதில் வழிப்பறி செய்த கும்பல் இவர்களை தான் என்பது உறுதியாக, 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் 4 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |