கணவர் ஒருவர் சாப்பாடு செய்ய தாமதமாக்கிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனு(45). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயம்மா (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயம்மா தன்னுடைய மகனுடன் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஸ்ரீனு தன்னுடைய மனைவியை சாப்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜெயம்மா கொஞ்சம் கழித்து சாப்பாடு செய்யலாம் என்று உட்கார்ந்திருந்துள்ளார்.
இதை கவனித்த ஸ்ரீனு மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து தகராறு முற்றியதால் ஸ்ரீனு தன்னுடைய மனைவியை ஆத்திரத்தில் கழுத்தை புடவையால் நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து ஸ்ரீனுவின் மகன் தன்னுடைய அம்மா மூச்சு பேச்சில்லாமல் தரையில் விழுந்து இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர் ஏற்படுத்தியுள்ளது.