Categories
சினிமா தமிழ் சினிமா

செம்பருத்தி சீரியல் ஹீரோவின் லேட்டஸ்ட் புகைப்படம்…. அட…! இப்போ எப்படி இருக்கார் பாருங்க…!!

சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அவர்களது பொழுது போக்காக இருப்பது சீரியல்கள்தான். அப்படி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களுள் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல். குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள பார்வதி கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகனாக இருந்த கார்த்திக் ராஜ் மற்றும் ஷாபானாவுக்காகவே இந்த சீரியலை பலரும் பார்த்து வந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் கார்த்திக் ராஜ் இந்த சீரியலில் இருந்து விலகினார். அதன்பிறகு அவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் அக்னி என்பவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்தியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் அவருடைய நண்பருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். கார்த்திக் ராஜ் நடிப்பில் வெளியான முகிலன் திரைப்படம் அண்மையில் ஓடின தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |