புதுக்கோட்டையில் சரவணன் என்ற படத்தில் ஒரு பாடலில் நடித்திருந்த தாரிகாவின் தற்போதைய புகைப்படம் இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“புதுக்கோட்டையில் சரவணன்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு சரக்கு என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான தாரிகாவின் நடனத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள் பலர். இதையடுத்து தாரிகா படங்களில் பெரிய அளவில் நடிக்கவில்லை. மேலும் தாரிகாவை படங்களில் ஒரு சில பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கு மட்டுமே இயக்குனர்கள் நடிக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் தாரிகாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதனை கண்ட ரசிகர்கள் பலரும் புதுக்கோட்டையில் சரவணன் படத்தில் ஒல்லியாக நடித்திருந்த தாரிக்கா இப்போது இவ்வளவு குண்டாக மாறிவிட்டாரே என ஆச்சரியத்தில் பார்த்து வருகின்றனர். மேலும் அவர் இறுதியாக நடித்த படம் “நிமிர்ந்து நில்” என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.