பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார் ,இந்நிலையில் தான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
புகழ்மிக்க பாடகியான லதா மங்கேஷ்கர், உடல்நலக் குறைவாள் மும்பையிலுள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் போன மாதம் அனுமதிக்கப்பட்டு நிமோனியா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சையின் பலனால் குணமடைந்த அவர், சுமார் 28 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளார் . இதனை அடுத்து லதா மங்கேஷ்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் , தனக்காக பிராத்தனை செய்த அணைத்து ரசிகர்கள், நலம் விரும்பிகள், சிகிச்சையளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.