ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி, காலமான பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் இனிமையான இசை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.
பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று காலமானார். இந்திய நாட்டின் இன்னிசை குயில் என புகழப்பட்ட அவருக்கு 92 வயது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த மாதம் எட்டாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதன் பின்பு, நேற்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதரத்னா லதா மங்கேஷ்கர் காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இரண்டு தினங்கள் தேசிய துக்கம் அனுசரிக்கபடுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு தினங்களுக்கு அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
லதா மங்கேஷ்கர் காலமானதை தொடர்ந்து, உலக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள் போன்ற அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய், தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தன் குரல் மூலமாக லட்சக்கணக்கான உள்ளங்களில் மகிழ்ச்சியை நிறைத்தவர்.
With her voice #LataMangeshkar filled millions of hearts with joy. Her melodies are universal and forever. My profound condolence to her family and the people of #India.
May the nightingale of #India Rest In Peace. pic.twitter.com/b7OFGgSaez— Hamid Karzai (@KarzaiH) February 6, 2022
அவரின் இனிமையான பாடல்கள் உலகம் முழுக்க பரவி என்றென்றும் நிலைத்திருக்கும். இந்திய மக்கள் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்/ இந்தியாவினுடைய இசை பறவையின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.