Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு ஒன்றுதான் உண்மை…. வைரலாகும் லதா ரஜினிகாந்த் பாடல்….!!

லதா ரஜினிகாந்த் சொந்த முயற்சியால் எழுதி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லதா ரஜினிகாந்த் அவர்களின் “அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை, அன்பு இல்லாத ஒரு உள்ளம் இல்லை” என்ற பல்லவிகளைக் கொண்ட பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலை அவரே எழுதி பாடியுள்ளார். மேலும் இப்பாடல் வரிகளில் அன்பின் பெருமையையும், குடியின் கேடுகளையும் விவரித்துள்ளார்.

“மனதை அழித்தான், தன்னையும் மறப்பான், நான் என்ற அகந்தை கடலில் மிதப்பான்” என்ற மதுவுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட வரிகளை இயற்றியுள்ளார். இப்பாடலால் கவரப்பட்ட ரசிகர்கள் முழு மனதுடன் வரவேற்று கருத்துகளை வெளியிட்டுள்ளனர். நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் தனுஷ் லதா ரஜினிகாந்த்தை வாழ்த்தி உள்ளனர். ‘நேற்று இந்த நேரம், கடவுள் உள்ளமே, டிங் டாங், குக்குக்கூ கூவும்’ போன்ற பாடல்களில் பின்னணி பாடகியாக பாடியுள்ளார் லதா ரஜினிகாந்த்.

Categories

Tech |