Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகள்…. நடிகர் விஷால் நடிக்கும் “லத்தி” படத்தின் விமர்சனம் பற்றி ஓர் அலசல்…..!!!!

விஷால் நடிப்பில் நடப்பு ஆண்டு வெளியான 2வது படம் “லத்தி”. இப்படம் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் சுனைனா, தலைவாசல் விஜய், ரமணா, பிரபு, முனீஸ்காந்த், மிஷா கோஷல் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இரண்டும் வெளியாகிய பின், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. தற்போது லத்தி பட விமர்சனம் குறித்து காண்போம்.

வழக்கமாக ஐ.பி.எஸ் அதிகாரியாக வரும் ஹீரோக்களுக்கு மத்தியில் சாதாரண காவலராக வரும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவின் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதே “லத்தி”.  போலீஸ் நிலையத்தில் லத்தி அடி கொடுத்ததற்காக மனித உரிமை ஆணையத்தால் தண்டிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார் காவலர் முருகானந்தம் (நடிகர் விஷால்).

இதையடுத்து நடிகர் தலைவாசல் விஜய்யின் சிபாரிசில் அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்கிறார் காவல் துறை உயர் அதிகாரியாக வரும் நடிகர் பிரபு. இதற்கிடையில் நடிகர் பிரபுவின் மகளுக்கு வில்லன் வாயிலாக துன்புறுத்தல் வருகிறது. இதன் காரணமாக கோபமடையும் நடிகர் பிரபு வில்லனை கடத்தி வருகிறார். அவருக்கு உதவிசெய்வதற்காக விஷால், வில்லனை லத்தியடிக்கு உட்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடையும் வில்லன் ரமணா தன்னை அடித்த விஷாலை கண்டுபிடித்தாரா? அவரிடமிருந்து விஷால் எப்படி தப்பித்தார்? என்பதே லத்தி கதையாகும்.

Categories

Tech |