Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தடைசெய்யப்பட்ட பொருள்…. அதிரடி சோதனை…. போலீஸ் நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கருர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை நகரப்பகுதி மற்றும் வதியம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அபிராமி சுந்தரம், ரங்கநாதன், சந்தோஷ் குமார், முகமது ரபிக், கிருஷ்ணமூர்த்தி, வாசுதேவன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 27,690 ரூபாய், 3 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |