எப்படி சிரித்துக்கொண்டு உள்ளோ போனோமோ அப்படியே சிரித்துக் கொண்டு வெளியே வந்தோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் , நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் , கட்சியின் தலைமை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமையகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், MLA-க்கள் , MP_க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில் , அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை. அதிமுக_வின் பொதுக்குழு குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள்.நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் , நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். எப்படி சிரித்தபடி கூட்டத்திற்கு உள்ளே சென்று பங்கேற்றோமோ, அதே போல சிரித்தபடி வெளியே வந்தோம் என்று அமைச்சர் கூறினார்.