மனதை கொள்ளை கொண்டு வெளி நபர்களிடமும் ஒரு அழகான நட்பை உருவாக்கும் சிரிப்பின் சிறப்புகள் பற்றிய தொகுப்பு
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது நம் முன்னோர்கள் சொன்னது. நவீன மருத்துவ வசதிகள் வந்து விட்ட இன்றைய காலத்திலும் சிரிப்பு யோகா பல்வேறு நோய்களை வர விடாமலும் தடுக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதிகம் சிரிப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழலில் உள்ள தொழில் வல்லுனர்கள், வணிகர்கள். மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் லாபர் யோக முறையைப் பெரிதும் விரும்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டு மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சிரிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய இயந்திர உலகத்தில் ஒவ்வொருவரையும் மன அழுத்தம், சோர்வு அடைவது மட்டுமன்றி நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். உடலும் மனமும் புத்துணர்ச்சியை ஒரே நேரத்தில் பெரும் அரிய மருந்தாக லாபர் யோகா முறை உள்ளது என கூறுகின்றனர் மருத்துவர்கள். சென்னையில் இருக்கும் அனைத்து பூங்காக்களிலும் இந்த லாபர் யோகா பயிற்சியில் ஈடுபடுபவர்களை பார்க்கமுடியும்.
அதிகம் சிரிப்பதற்க்கு வாய்ப்பு இல்லாத சூழலில் இருக்கும் தொழில் வல்லுனர்கள், வணிகர்கள், மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் லாபர் யோக முறையைப் பெரிதும் விரும்புகின்றனர்.வழக்கமாக ஒரு மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி பலனை லாபர் யோகாவை செய்த 20 நிமிடங்களில் பெறலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். நாள்தோறும் 30 நிமிடங்கள் வாய்விட்டுச் சிரிப்பது மாரடைப்பு காரணமாக மன அழுத்தம் ஹார்மோன்களின் சுரப்பும் அவற்றின் மூலக்கூறு எண்ணிக்கையும் குறையும் எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிரிப்பு என்பது மனிதனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது மனிதனின் ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகின்றது. திரைப்படத்திலும் மக்களை மகிழ்விக்க வடிவேலு போன்ற தலை சிறந்த நகைச்சுவை கலைஞர்கள் நம்மை சிரிக்க வைக்க பாடுபடுகின்றனர். அது அவர்களின் நலனுக்காக அல்ல நமது உடல் நலனுக்காகவும் மன நலனுக்காகவும் தான். சிரிக்க சிரிக்க உடலும் மனதும் புத்துணர்வு பெறுகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. எனவே சிரிக்க பழகுவோம் சிரித்துக் கொண்டே இருப்போம்.