ரெயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பிள்ளையார் கோவில் பகுதியில் சத்யா, சதீஷ்குமார் இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் 4 வருடத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சத்யாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவர்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காவல் நிலையம் மூலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதனையடுத்து அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரும், சத்யாவும் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு ஊழியர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது விஸ்ணுக்கும், சத்யாவுக்கும் இடையே உள்ள தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதன் காரணமாக கணவரை பிரிந்த சத்யா விஷ்ணுவுடன் பழகி வந்துள்ளார். இதனிடையே விஷ்ணுவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் பெண் பார்க்க தொடகியுள்ளனர். இதனால் சத்யா தன்னை விட்டு விட்டு திருமணம் செய்யக்கூடாது என விஸ்ணுவிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஸ்ணு தனது பெற்றோரிடம் ஏதும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் விஸ்ணு, சத்யா இருவரும் இனி நாம் வாழ முடியாது என்று முடிவு செய்து பாண்டிச்சேரியில் இருந்து சேலம் வந்த எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பொன்னாம்மா பேட்டை பகுதியில் ரயில் முன்புப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.