ஹரியானா மாநிலம் சூரஜ் குண்டில் இரண்டு நாட்கள் உள்துறை அமைச்சர்கள் மாநாடு என்பது நேற்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் முதல்வர்கள் நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டிருக்க கூடிய நிலையில், தமிழகத்தின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டிருக்கிறார்.
நேற்றைய தினம் இந்த மாநாட்டின் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும் NIA கிளை என்பது விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இன்றைய தினம் டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, சட்டம் ஒழுங்கு பற்றிய மிக முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார். அதாவது சட்டம் மற்றும் ஒழுங்கு மாநிலத்தின் பொறுப்பு என்பதை தற்போது வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இவை தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை மேம்படுத்த மாநில அரசுகள் தங்களுடைய அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை பேணி, அதற்கான கொள்கையை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தற்போது தெரிவித்திருக்கிறார்.இப்படி நாடு முன்னேறும்போது அதனுடைய வளர்ச்சி என்பது அடிமட்டத்தில் இருக்கக்கூடிய கடைசி நபர்க்கும் சென்றடைவதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டுமென முதல்வர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.இன்று மாலை வரை இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.