தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற திமுக MLA கேள்விக்கு முதல்வர் பேரவையில் பதிலளித்தார்.
2_ஆவது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேரவையில் பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அரசின் மீது சில கருத்துக்களை அவர் முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி , நாட்டிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்றும் , அதற்கான விருதினை மத்திய அரசு கொடுத்திருக்கிறது , ஆளும் அரசு அதைக் கூறவில்லை மத்திய அரசே சொல்லி இருக்கின்றது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.