Categories
சினிமா தமிழ் சினிமா

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் களமிறங்கும் லாரன்ஸ்…..!!

லிங்குசாமி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘காஞ்சனா 3’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண், சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ளார். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல் பேசும் படம் ‘ரங்கஸ்தலம்’. சுகுமார் இயக்கிய இத்திரைப்படம் டோலிவுட்டில் செம ஹிட்.

ராகவா லாரன்ஸை வைத்து ‘ரங்கஸ்தலம்’ படத்தை லிங்குசாமி இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘சண்டகோழி 2’ படத்துக்குப் பிறகு ஒரு வருடமாக லிங்குசாமி எந்தப் படத்தையும் இயக்கவில்லை. தற்போது ‘ரங்கஸ்தலம்’ படத்தை ரீமேக்கை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ‘ரங்கஸ்தலம்’ படத்தின் ரீமேக் உரிமையை லாரன்ஸ் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |