தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சொத்து தகராறு காரணமாக நடைபெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே உள்ள கிளாரட் நகரை சேர்ந்த வழக்கறிஞரான காமராஜ் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். கிளாரண் நகர் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை காயமின்றி உயிர் தப்பினார். காமராஜ் வெட்டப்பட்ட அதே சமயம் மற்றொரு கும்பல் காமராஜர் நண்பர் சக்திவேலையும் வெட்டி படுகொலை செய்துள்ளது. சொத்து தகராறு காரணமாக இந்த இரட்டைக் கொலை நடைபெற்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் மேலும் 8 பேரை தேடி வருகின்றனர்.