Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் …வழக்கறிஞர் கைது …!!

கோவையில் 14வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் ஒருவர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

உலக நாடுகளில் பெண்களுக்கெதிரான பல்வேறு பாலியல் குற்றங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் தமிழகம் கோவை மாவட்டத்தில் உள்ள பி.என் புதூரை சேர்ந்த சங்கரநாராயணன் என்ற வழக்கறிஞர் ஆர்.எஸ் புறத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவ ,மாணவியருக்கு சிறப்பு வகுப்பாக ஸ்போக்கன் இங்கிலீஸ் பாடம் இலவசமாக நடத்தி வந்துள்ளார் .இந்நிலையில் அங்கு  பாடம் பயில வந்த சிறுமியிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. .இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் பேரில் போலீசார் சங்கரநாராயணனை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர் .

Categories

Tech |