Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை காப்பாற்ற…. கொலை செய்யப்பட்ட பெண்… வழக்கறிஞர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிட்கோ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஈ.டி. ராஜவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் வழக்கறிஞராக இருந்துள்ளனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி 12 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இருந்து தனது மனைவி மோகனாவை காப்பாற்றுவதற்காக ஈ.டி. ராஜவேல் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் வசிக்கும் அம்மாசை என்ற பெண்ணை கொலை செய்துள்ளார். அதன்பிறகு தனது மனைவி இறந்து விட்டதாக கூறி தனது மனைவி மோகனா பெயரில் இறப்பு சான்றிதழை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கணபதி பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற ராஜவேல் தனது மனைவி மோகனா பெயரில் சொத்து ஒன்றை பதிவு செய்யவேண்டும் என்று கூறியதற்கு சார்பதிவாளர் இறந்தவர்களின் மீது சொத்து பதிவு செய்ய முடியாது என்று கூறி அதனை மறுத்து விட்டார். இதனால் ராஜவேல் கோவை மாநகராட்சிக்கு தனது மனைவியின் இறப்பு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என கோரி விண்ணப்பித்துள்ளார். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் சந்தேகம் அடைந்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, ராஜவேல் தனது மனைவியை காப்பாற்றுவதற்காக அம்மாசை என்ற பெண்ணை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ராஜவேல், அவரது மனைவி மோகனா, கார் டிரைவர் பழனிசாமி, அவருடைய உதவியாளர் போன்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராஜவேல் கோயம்புத்தூர் மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து சிறை காவலர்கள் அவரை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

Categories

Tech |