வழக்கறிஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமாநகர் வடக்கு தெருவில் கோபிகண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு கோதாவரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். இதனை அடுத்து கோபிகண்ணன் தன் வீட்டின் அருகில் மகளுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து கோபிகண்ணனை அவரின் மகள் கண்முன்னாடியே அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் கோபிகண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் வழக்கறிஞர் கோபிகண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வழக்கறிஞரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.