Categories
உலக செய்திகள்

“ஆளுங்கட்சி பெண் தலைவரை தாக்கிய வழக்கறிஞர்கள்!”.. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் பரபரப்பு..!!

பாகிஸ்தான் ஆளுங்கட்சியின் பெண் தலைவரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில், “பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்” என்ற ஆளும் கட்சியின் தலைவராக இருக்கும் லைலா பர்வீன், தன் முன்னாள் கணவர் மற்றும் வழக்கறிஞரான ஹஸ்னைன் போலியான செக்கை தனக்கு கொடுத்ததாக அவர் மீது வழக்கு தொடர்ந்தார். சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான  விசாரணை நடைபெற்று வந்தது.

எனவே, நீதிமன்றத்தில் ஆஜராக லைலா பர்வின் அவரது சகோதரருடன் வந்திருக்கிறார். அப்போது, அவரின் முன்னாள் கணவரும் சக வழக்கறிஞர்களும் சேர்ந்து அவருடன் தகராறு செய்துள்ளனர். அவரின் சகோதரர் அதனை தட்டி கேட்டதால், வழக்கறிஞர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர்.

அதனை தடுக்க முயன்ற லைலா பர்வீனையும் வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கி, உதைத்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார். நீதிமன்றத்தில் நடந்த கலவரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், லைலா பர்வீன், தன்னையும், சகோதரரையும் அடித்த முன்னாள் கணவர் மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |