144 தடை உத்தரவை அமல்படுத்த பணியாற்றி வரும் காவல்துறையினரை விமர்சிக்க வேண்டாம் என என பார் கவுன்சில் தலைவர் அமலராஜ் அறிவுறுத்தியுள்ளார். காவல்துறையை விமர்சிப்பது சட்ட விதிகளுக்கு எதிரானதாக கருதப்படும் என்றும் காவல் துறையினரை தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் எந்த வடிவிலும் விமர்சிப்பதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார் கவுன்சில் வழக்கறிஞர்களின் பதிவுகளை நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பார் கவுன்சில் அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் 724ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
இதனால் தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் ஒரு சில இடங்களில் தடியடி நடத்தி வருகின்றனர். மேலும் திருக்குறள் ஒப்புவித்தல், சாலையில் உருளுதல் போன்ற தூதான தண்டனைகளை வழங்கி வருகின்றனர். காவல்துறையின் இந்த செயல்களை சில வழக்கறிஞர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனை பார் கவுன்சில் கண்டித்துள்ளது குறிப்பிட்டதக்கது.