முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மன் தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து தங்கம் வென்ற வீராங்கனை பி.வி சிந்து_க்கு பல்வேறு தரப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற பி.வி சிந்துவுக்கு வாழ்த்துக்கள். ஜப்பானின் ஒகுஹாராவை அத்தகைய உறுதியான முறையில் தோற்கடிக்க திறன், உடற்பயிற்சி மற்றும் மன வலிமை ஆகியவற்றின் சிறந்த கண்காட்சி. உங்களுக்கு பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.
Congrats @Pvsindhu1 on winning the Gold medal at #BWFWorldChampionships2019 Great exhibition of skill, fitness and mental strength to defeat Japan’s Okuhara in such an emphatic fashion. Proud of you.
— VVS Laxman (@VVSLaxman281) August 25, 2019