Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி இயக்குனர் படத்தில்… வில்லனாக நடிக்கப் பேச்சுவார்த்தை… என்ன சொல்லப்போகிறார் ஜெய்..?

இயக்குனர் அட்லி உடன் ராஜா ராணி படத்தில் பணியாற்றிய ஜெய், தற்போது அவரது படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. பின்னர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானை வைத்து இந்தி படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்நிலையில் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை  நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை அட்லியின் உதவியாளராக பணியாற்றிய ஒருவர்,  இயக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் தற்போது பார்ட்டி என்ற படத்தில் நடிகர் ஜெய் நடித்து முடித்துள்ளார். தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |