Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர் தீயா இருக்காரே….. படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான வேற லெவல் வீடியோ…. செம டிரெண்டிங்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள அழககய நத்தம் என்ற பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதால் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பொதுமக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதோடு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ரஜினி கடலூரில் நடைபெறும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளதால் அவரை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். ரஜினிகாந்த் காரில் இருந்தபடி ரசிகர்களை கையெடுத்து கும்பிடுவது மற்றும் கேரவனுக்கு செல்லும்போது ரசிகர்களை பார்த்து வணக்கம் போடுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தலைவா நீங்க வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |